நவராத்திரி விரதத்தினை கடைப்பிடிப்பதனால் கிடைக்க் கூடிய பலன்கள்!!
அம்பாளுக்கு எத்தனை பண்டிகைகள் வந்தாலும்;, அவற்றுள் மிக மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுக் கூறக் கூடியது இந்த ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா ஆகும்.
புராணங்கள் நவராத்திரி பற்றிக் கூறும் போது, நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகையான பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்று கூறுகின்றன. தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம் மற்றும் மோட்சம் என ஒரு மனிதனுக்கு தேவையான சகலத்தையும் வழங்கக் கூடிய விரதமாக இந்த நவராத்திரி விரதம் காணப்படுகின்றது.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், படிப்பில் மந்தமாக பின்தங்கி உள்ளவர்கள் இந்த விரதத்தை சரியான முறையில் கடைபிடிப்பதன் மூலம் உயர்ந்த நிலையினை அடைய முடியும்.
தொடர்சியாக ஒன்பது நாட்களும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு மட்டும் தூங்காக்கு கண்விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் பாதுகாப்பாள். அதே போன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் நாளாந்தம் வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து நன்கு வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப்பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தும் போது இது சிறப்பான பலனைத் தரும்.
பெண் குழந்தைகளை இந்நவராத்திரி ஒன்பது நாட்களும், 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதுடன், சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் இது நிறைவு பெறுகின்றது. இங்கு, சிரவணம் அதாவது திருவோணம் அன்றே விஜயதசமி ஆகும்.
சமுதாயத்தினை பொதுவாக நாம் தொழில் மற்றும் புலமை ஆகிய இரண்டு பிரிவுகளில் அடக்க முடியும். அதில் ஒன்று புலமை ஞானம் இரண்டாவது தொழில் ஞானம் ஆகும். இங்கு புலமை பெறுவது என்பதும் ஒரு தொழில் என்பதுடன், இது ஞானத்துடன் தொடர்புடையதாக உள்ளது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜையாகவும், நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளதுடன், இவை மேலான நாட்களாகவும் கொள்ளப்படுகின்றன.
விஜய தசமி: தேவி ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு, பத்தாம் நாள் அவனை வென்ற, இந்நாளே விஜயதசமி அதாவது வெற்றி தருகின்ற நாள் என்று பொருள் கொள்ளப் படுவதுடன், பல குழந்தைகள் தமது கல்விச் செயற்பாடுகளை அதாவது ஏடுதொடக்கல் நிகழ்வுகளை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். விசேடமாக, இன்று ஆரம்பிக்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியடைவது வழக்கம்.
By: Tamilpiththan