Home Jaffna News இலங்கையில் அரிய வகை அணில்கள் கண்டுபிடிப்பு!படம் உள்ளே!

இலங்கையில் அரிய வகை அணில்கள் கண்டுபிடிப்பு!படம் உள்ளே!

0
534

அரணாயக்க பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு அரிய வகை வெள்ளை அணில்கள் இரண்டு கடந்த 10ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த பீ.ஜீ.செனவிரத்ன பண்டா என்பவரின் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வெள்ளை அணில் வந்துள்ளது.

பின்னர் இதனை செல்ல பிராணியாக வளர்த்து வந்த நிலையிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னுமொரு அரிய வகை அணில் ஒன்று அங்கு வந்துள்ளது.

தற்போது இந்த இரண்டு அணில்களும் அந்த வீட்டிலேயே வாழ பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அணில்கள் ஏனைய அணில்களை விட வித்தியாசமானதெனவும், அதன் உடல் வெள்ளை நிறத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவை அரிய வகையான அணில்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனை புகைப்படம் எடுப்பதற்கு மிகவும் கடினம் என குறிப்பிடப்படுகின்றது.

Previous articleதல அஜித் வாங்கியுள்ள புதிய கார் – புகைப்படம் இதோ!
Next articleஇந்த தமிழ் நடிகர் என்னுடன் ஹோட்டலில் இருந்தார்..! போட்டோ பதிவிட்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்!