Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இரண்டு மனைவி யாருக்கு அமையும் தெரியுமா? ஜாதகம் பற்றிய விளக்கம்!

இரண்டு மனைவி யாருக்கு அமையும் தெரியுமா? ஜாதகம் பற்றிய விளக்கம்!

0
2930

லக்னாதிபதி அஸ்தங்கம் அடைத்து 7 ல் அமர்ந்து 7 ம் வீட்டோன் லக்கினத்துக்கு 8 , 6 ( அ ) 12 ல் அமர்ந்து ( மறைவு பெற்று ) சுபர்களின் பார்வை இல்லையெனில்

ஜாதகர் லக்னாதிபதி திசையில் 7 க்குடையவன் புத்தியில் இரண்டு தாரம் அமைத்து விடுகிறது.

7 ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி பலவீனமாகி 6 , 8 , 12 ல் அமர்ந்து அவரை சுபகிரகம் பார்க்கவில்லையெனில் 7 ம் அதிபதி திசையில் இலக்கனாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .

லக்கினாதிபதி லக்னத்திலும் 7 ம் அதிபதி 7 ல் ஆட்சி பெற்று இருவரில் ஒருவர் வக்கிரமாகி இருவரில் ஒருவர் திசை ஒருவர் புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு 2தாரம் அமைந்து விடுகிறது .

மேலும் பலவீனமடைந்த லக்கினாதிபதி அமர்ந்த வீட்டோன் 2 ம் வீட்டிலோ , ( அ ) 7 ம் வீட்டிலோ அமர்ந்து அந்த வீட்டாதிபதி அஸ்தங்கமாகவோ , நீசமாகவோ , வக்கிரமாகவோ , அமைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .

லக்கினாதிபதி பலவீனம் அடைந்த மறைந்த ஜாதகத்தில் களத்திர ஸ்தானாமாகிய 7 ம் வீட்டில் பாவர்கள் நின்று 7 திசையில் லக்கினாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .

லக்கனாதிபதி பலவீனம் அடைந்த ஜாதகத்தில் 2 ம் அதிபதியும் , 7 ம் அதிபதியும் பாதிக்கப்பட்ட ஜாதகனுக்கு தார தோஷம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது

7 ம் அதிபதி பாவருடன் கூடி 2 ம் வீட்டு அதிபதி 6 , 8 , 12 , ல் மறைந்து சுபகிரகங்களின் பார்வை அவர்களுக்கு இல்லாமல் இருந்து லக்கினாதிபதி பலவீனம் அடைந்து லக்கினத்துக்கு மறைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமையும்

Previous articleநாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்!
Next articleவெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!