சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!!- யாழ் மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் பிரதான குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றின் விளக்குள் அனைத்தும் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
நாட்டின் தலைவரான ஜனாதிபதி தீர்மானிக்கும் தினத்தில் குற்றவாளிகளை உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்,
4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்,
8 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.