Home Patti Vaithiyam உடம்பில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா – இதை சாப்பிடுங்க! சும்மா ஸ்லிம்மாகிடுவிங்க பாருங்க!

உடம்பில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா – இதை சாப்பிடுங்க! சும்மா ஸ்லிம்மாகிடுவிங்க பாருங்க!

0
8250

சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு, ‘பி’ காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு.

இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது, 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.

மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம், செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.

பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும், பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும்.

Previous article‘S’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க!
Next articleஆண்மைக்கு உறுதியளிக்கும் இந்த கடலை பற்றி தெரியுமா?