Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? இதனை செய்திடுங்கள்!

வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா? இதனை செய்திடுங்கள்!

0
2053

நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே.

அதனாலேயே அஷ்டலட்சுமிகளில் தனலட்சுமிக்கு வரவேற்பு அதிகம். சில வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தாலே திருமகளின் அருள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி குபேர காலத்தில் குபேரனை வழிபடவேண்டும்.
குபேரனுக்கு ஊறுகாய் மிக பிடித்தமானதாகும். எனவே வீட்டில் விதவிதமாக ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.

வீட்டில் வெள்ளைப் புறா வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.

தினம் மாலை வேளையில் ஐந்துமுக குத்து விளக்கில் டைமன் கல்கண்டினை போட்டு விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

பகல் 12 மணிக்கு (அபிஜித் நட்சத்திரத்தில்) திருநங்கையருக்கு திருப்தி அளிக்கும் வண்ணம் உணவளித்து அவர் கையால் பணம் பெற்று கொண்டால் செல்வம் நிலைத்திருக்கும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், ஊசி, குடிநீர், உப்பு போன்றவற்றை யாருக்கும் கொடுக்கக்கூடாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு அருந்த நீர் கொடுத்து, பின் மஞ்சள், குங்குமம் அளித்தால் தரித்திரம் தீரும்.

வெள்ளிக்கிழமைகளின் சுக்ர ஓரைகளில் சுண்டல், மொச்சை செய்து நம் வீட்டில் உள்ளோர் மட்டும் சாப்பிட்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

அமாவாசையன்று வீட்டில் கோலம் போடக்கூடாது. தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது. பித்ருக்களை அன்று வழிப்பட செல்வம் சேரும்.

பசுவின் கோமியத்தினை தொடர்ந்து 45 நாட்கள் வீட்டில் தெளித்து, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி குளித்தால் தரித்திரம் தீர்ந்து பணம் சேரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் தனப்ராப்தி கிடைக்கும்.

தினசரி குளிக்கும் முன்னர் பசுந்தயிரை உடலில் தேய்த்து குளித்தால் பணவரவு கூடும்.

குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்தால் தரித்திரம் விலகும்.

தினம் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

சுக்ர ஓரையில் உப்பு வாங்கினால் செல்வம் குவியும்.

வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

மஞ்சளுடன் வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் நடக்கும் இடத்திலும் தெளித்தால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

குபேரனுக்கு வாழைத்தண்டில் திரி போட்டு விளக்கேற்றினால் பணவரவு பெருகும்.

சம்பாதிப்பதி ஒரு தொகையினை சேர்த்து அன்னதானமிட்டால் அதை போல் ஐந்து மடங்கு பணவரவு கிட்டும்.

மகாலட்சுமிக்கு பச்சைப்பட்டு உடுத்தி வணங்கினால் பணவரவு கூடும்.

குலதெய்வத்தை நம்பிக்கையுடன் அதிகாலை நேரத்தில் வழிப்பட பணம் வரும்.

ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

பூஜை அல்லது கடவுளை வணங்கும் போது கைலி எனும் லுங்கிகளை அணியக்கூடாது.

இரவில் தயிர் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்.

வீட்டு வாசலைப் பார்த்த வண்ணம் வெங்கடாசலப்பதியின் படத்தை மாட்டி வைத்தால் தனம் பெருகும்.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும் போது தலைப்பகுதி நம்மிடம் இருக்குமாறுக் கொடுக்க வேண்டும்.

Previous articleகேரளத்து பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா?
Next articleநீங்கள் லட்சாதிபதியாக கடைபிடிக்க வேண்டிய சில அட்டகாசமான வழி முறைகள்