இன்றைய ராசிபலன் 26.6.2018 செவ்வாய்கிழமை !
26.6.2018 செவ்வாய்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 12-ம் நாள்.
வளர்பிறை திரயோதசி திதி காலை 8.11 வரை பிறகு சதுர்த்தசி. அனுஷ நட்சத்திரம் காலை 9.08 வரை பிறகு கேட்டை. யோகம்: சித்தயோகம்.
குளிகை: 12:00 – 3:30
சூலம்: வடக்கு.
பொது: பழநி மலைக்கோவில் ஜேஷ்டாபிஷேகம், அன்னாபிஷேகம். திருமலை திருப்பதி ஜேஷ்டாபிஷேக நிறைவு.
பரிகாரம்: பால்.
நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.
மேஷம் : பிரச்னை
ரிஷபம் : செயல்
மிதுனம் : தன்னம்பிக்கை
கடகம் : உயர்வு
சிம்மம் : நட்பு
கன்னி : வருமானம்
துலாம் : இன்பம்
விருச்சிகம் : வெறுப்பு
தனுசு : விரக்தி
மகரம் : நட்பு
கும்பம் : காரியம்
மீனம் : நன்மை
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்
கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அழகு, இளமைக் கூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
தனுசு: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
மகரம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.
கும்பம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துபேசுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சாதிக்கும் நாள்.
மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.




