இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது.இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்.இதய ரேகை கைரேகை ஜோதிடர்கள் கையில் உள்ள இந்த இதய ரேகையின் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு தான், ஒருவரது காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து கூறுகின்றனர். எனவே உங்களது வலது மற்றும் இடது கைகளில் உள்ள இதய ரேகையை சோதித்துப் பாருங்கள்.