Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிபலன் 14.6.2018 வியாழக்கிழமை !

இன்றைய ராசிபலன் 14.6.2018 வியாழக்கிழமை !

0
1112

இன்றைய ராசிபலன் 14.6.2018 வியாழக்கிழமை !

14.6.2018 வியாழக்கிழமை விளம்பி வருடம் வைகாசி மாதம் 31-ம் நாள்.
வளர்பிறை பிரதமை திதி மறுநாள் நள்ளிரவு 12.02 வரை பிறகு துவிதியை. மிருகசீரிஷ நட்சத்திரம் மாலை 4.02 வரை பிறகு திருவாதிரை. யோகம்: மரணயோகம்.
குளிகை: 9:00 – 10:30
சூலம்: தெற்கு.
பொது: சுவாமிமலை முருக பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.

மேஷம் : உயர்வு
ரிஷபம் : சந்தோசம்
மிதுனம் : ஈகோ
கடகம் : டென்ஷன்
சிம்மம் : இன்பம்
கன்னி : திறமை
துலாம் : சந்திப்பு
விருச்சிகம் : சங்கடம்
தனுசு : வெற்றி
மகரம் : மகிழ்ச்சி
கும்பம் : நட்பு
மீனம் : நலன்

மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக
செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விசேஷங்களை முன்னின்று டத்துவீர்கள்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைகூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள்
கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமா
கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

Previous articleவலது கண் துடித்தால் என்ன அர்த்தம்? Valathu kan thudithal enna palan in tamil|கண் துடிக்கும் பலன்
Next articleசந்தோசத்தை பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்!