Home Patti Vaithiyam கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் இந்த இலகுவான‌ பயிற்சிகளை செய்யுங்கள்! கண்டிப்பாக‌ சிறந்த தீர்வு கிடைக்கும்!

கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் இந்த இலகுவான‌ பயிற்சிகளை செய்யுங்கள்! கண்டிப்பாக‌ சிறந்த தீர்வு கிடைக்கும்!

0
1644

பயிற்சி 1: உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டாக்கி கண்கள் மேல் லேசாக சூடு பரவும் வரை வைத்து எடுங்கள் இவ்வாறு செய்தால் கண்களுக்கு இதமாக இருக்கும்.

பயிற்சி 2: கணினி ,மொபைல் போன் பாவிப்பவா்கள் 5 நிமிடம் கண்களை இறுக மூடி திறந்தால் கண்கள் தெளிவடையும்.

பயிற்சி 3: கணினியில் வேலை செய்பவர்கள் 30 நிமிடத்திற்கு ஒரு முறை தொலைதூரத்தினை அல்லது பொருட்களை உற்று நோக்கி பயிற்சி செய்தால் தொலை தூர பாா்வை குறையிலிருந்து
விடுபடலாம்.

பயிற்சி 4: மேலும் நீங்கள் கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்வதால் கண்ணில் பூச்சி ஓடுவதைப் போன்ற நினைப்பிலிருந்து விடுபடலாம்.

பயிற்சி 5: கண்களில் நீங்கள் அதிக அழுத்தத்தையோ , எரிச்சலைலோயோ உணர்கிறீர்கள் என்றால் உடனே குளிர்ந்த நீரினால் கண்களை கழுவுங்கள். இதனால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்க முடியும்.

பயிற்சி 6: ஜூமிங் (zooming) பயிற்சி, அதாவது உங்கள் விழிகளுக்கு அண்மையில் இருந்து ஏதேனும் நகரும் பொருளை உற்று நோக்குதல். உதாரணமாக, கை விரலை, முகத்திற்கு அருகாமையில் இருந்து நகர்த்தி உற்றுப் பாா்த்தல்.

பயிற்சி 7 உங்கள் கண்களை மூடி இருளை உணர்ந்து கொண்டு மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, பின் மெதுவாக விட வேண்டும். இதை 5 தடவை செய்தல் வேண்டும்.நீங்கள் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது.

By: Tamilpiththan

Previous articleசகல விதமான தோல் நோய்களுக்கும் ஒரே வீட்டு மருத்துவத்தில் தீர்வு!
Next articleஇன்றைய ராசிபலன் 12.6.2018 செவ்வாய்கிழமை !