இன்று 11-12-2022 கார்த்திகை மாதம் 25ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று திரிதியை திதி மாலை 04.15 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. இன்று புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.36 வரை பின்பு பூசம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். இன்று நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷம் ராசிக்கு:
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.
ரிஷபம் ராசிக்கு:
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற இடையூறு உண்டாகும். வெளியிலிருந்து வர வேண்டிய பண வரவுகள் கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மிதுனம் ராசிக்கு:
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் பணிச்சுமை குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
கடகம் ராசிக்கு:
இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி ராசிக்கு:
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம் ராசிக்கு:
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். வங்கி சேமிப்பு குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.
விருச்சிகம் ராசிக்கு:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தினருடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 1.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.
தனுசு ராசிக்கு:
இன்று உங்களுக்கு பகல் 1.50க்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். பேச்சிலும் செயலிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் விஷயத்திலும், ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை.
மகரம் ராசிக்கு:
இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கும்பம் ராசிக்கு:
இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம் ராசிக்கு:
இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.