மீனத்தில் வக்ர நிவர்த்தி அடையும் குருபகவானால் நவம்பர் 24 முதல் இந்த 5 ராசிக்கு அதிஸ்டமாம்!

ரிஷப ராசிக்கு 11 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடனான உறவு சிறக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
கடக ராசிக்கு 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். வாழ்வின் பல விஷயங்களில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதால் நல்ல பண வரவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கள் சாதகமாக இருக்கும். தொழிலில் இக்காலத்தில் முதலீடு செய்தால் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளியின் முழு ஆதரவைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மேலோங்கும்.
கன்னி ராசிக்கு 7 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். வாழ்க்கையில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமடைவதால் சாதகமான் பலன்கள் கிடைக்கும். அதிகமான பணத்தை சேமிக்க முடியும். புதிய முதலீடு செய்யும் வாய்ப்புக்களும் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிக ராசிக்கு 5 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலை மாற்றம் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை சிறப்பாக அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
கும்ப ராசிக்கு 2 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். உங்களின் செயல்களில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்போருக்கு இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் மிகச்சிறப்பாக இருக்கும்.