இன்றைய ராசிபலன் 13.11.2022 Today Rasi Palan 13-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 13-11-2022 ஐப்பசி மாதம் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று பஞ்சமி திதி இரவு 12.52 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. இன்று திருவாதிரை நட்சத்திரம் பகல் 10.18 வரை பின்பு புனர்பூசம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

Today Rasi Palan 13-11-2022

மேஷம் ராசிபலன்:

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம் ராசிபலன்:

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

மிதுனம் ராசிபலன்:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம் ராசிபலன்:

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

சிம்மம் ராசிபலன்:

இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.

கன்னி ராசிபலன்:

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

துலாம் ராசிபலன்:

இன்று எடுக்கும் காரியத்தை செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

விருச்சிகம் ராசிபலன்:

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் தடை தாமதங்கள் ஏற்படும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு ராசிபலன்:

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம் ராசிபலன்:

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.

கும்பம் ராசிபலன்:

இன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம் ராசிபலன்:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமாங்கல்யம் தவறுவது போன்று கனவு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா! உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!
Next articleமே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி: 12 ராசிக்கும் நடக்கப்போகும் அதிஸ்டம்!