சுற்றுலாத் துறையினருக்கு புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது!

0

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி QR குறித்து இன்று காலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் குறித்த புதிய வழிமுறை குறித்து அமைச்சர் எடுத்து விளக்கியுள்ளார்.

ஒரு தொலைபேசி எண் மூலம் பல வாகனங்களைப் பதிவு செய்தல், சிறப்புத் தேவைப் பிரிவை உருவாக்குதல், வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளுக்கான QR முறைமை அறிமுகம் உட்பட பல புதிய முன்மொழிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
Next articleஇன்றைய ராசி பலன் 10.08.2022 Today Rasi Palan 10-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!