வவுனியாவில் மற்றுமொரு கோவிட் மரணம்!

0

வவுனியாவில் மற்றுமொரு கோவிட் மரணம்!

வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு இன்று(9) மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததினை தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி கோவிட் தொற்று காரணமாக குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கோவிட் தொற்றுக்குள்ளான 6 நோயாளிகள் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இவர்கள் அனைவரும் ஏற்கனவே கோவிட் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கடந்த ஜூலை மாதம் கோவிட் தொற்றால் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாளை முதல் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்!
Next articleகொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!