நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைப்பு! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.
மேலும், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: