இன்று 08-08-2022 ஆடி மாதம் 23ம் நாள் திங்கட்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி இரவு 09.01 வரை பின்பு வளர்பிறை துவாதசி. இன்று கேட்டை நட்சத்திரம் பகல் 02.37 வரை பின்பு மூலம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். இன்று பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம் 12.00-01.00, மதியம் 3.00-4.00, மாலை 06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம் ராசிக்கு:
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வேலையில் வீண் அலைச்சல் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து மன அமைதி ஏற்படும்.
ரிஷபம் ராசிக்கு:
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.37 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம் ராசிக்கு:
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.
கடகம் ராசிக்கு:
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.
சிம்மம் ராசிக்கு:
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை நிலவும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கன்னி ராசிக்கு:
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வெளி பயணங்களில் வேற்று மொழி நபர்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம் ராசிக்கு:
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். பொறுமையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம் ராசிக்கு:
இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.
தனுசு ராசிக்கு:
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். தெய்வ வழிபாடு நல்லது.
மகரம் ராசிக்கு:
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
கும்பம் ராசிக்கு:
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம் நிகழும்.
மீனம் ராசிக்கு:
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எடுத்த காரியம் வெற்றி பெற பொறுப்புடன் செயல்படுவது நல்லது.