சங்கஷ்டி சதுர்த்தி (Sankashti Chaturthi Tithi) குழந்தை இல்லாத தம்பதிகள் கண்டிபாக சங்கஷ்டி சதுர்த்தி விரதத்தை….

0

சங்கஷ்டி சதுர்த்தி (Sankashti Chaturthi) இன்றைய நாள் இந்து சமய மக்களின் ஒரு சிறப்பு மிகுந்த நாளாகும். விநாயகப் பெருமானை (The Lord Ganesha) வணங்குவதன் மூலம் அவர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். விநாயகப் பெருமானை பொதுவாக “பிரதம் பூஜ்யா” என்று அழைப்பார்கள் அதாவது அவர் முதலில் வணங்கப்பட வேண்டிய கடவுள் ஆவர்.

ஒவ்வொரு மாதமும், “கிருஷ்ண பக்ஷ” மற்றும் “சுக்ல பக்ஷ” சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானுக்கு பக்தர்களால் இந்த விரதம் மிகசிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இந்து சாஸ்திரங்களின்படி “கிருஷ்ண பக்ஷ” சதுர்த்தி “சங்கஷ்டி சதுர்த்தி” என்றும் “சுக்ல பக்ஷ” சதுர்த்தி விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறாக இந்த மாதம், சங்கஷ்டி சதுர்த்தி என்னும் ஜூலை 16 அன்று குறிக்கப்படுகிறது. மத நம்பிக்கை மற்றும் நடைமுறையின்படி, விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்குள்ள அனைத்து தடைகளையும் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மையையும் அகற்றி கடவுளிடம் உதவி பெறுவார்கள்.

இந்த நாளில் பக்தர்கள் அதிகாலையில் நீராடி அன்றைய தினத்தை தொடங்குகின்றனர். அவர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்து, விநாயகப் பெருமானிடம் ஆசி பெறுவதற்காக ஒரு நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள். இவ்வாறான நேரத்தில், பக்தர்கள் கனமான உணவை சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்து, பால் மற்றும் பழங்களை மட்டுமே உட்கொள்கின்றனர். இரவில் சந்திரனை பார்த்துவிட்டு பின்னர் விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

விநாயகப் பெருமானின் சிறப்பு அருளைப் பெற, எப்போதும் போல அவரிடம் உதவி பெறவும் இந்த நாள் சிறப்பக கொண்டாடுகின்றனர். இதனால் குடும்பத்தில் நல்ல ஆரோக்கியமும், செழிப்பும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

இன்னும் சிறப்பாக குழந்தை இல்லாத தம்பதிகள் சங்கஷ்டி சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

#Sankashti #Chaturthi #Tithi #சங்கஷ்டி #சதுர்த்தி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 15.07.2022 Today Rasi Palan 15-07-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஎரிபொருளின் விலை குறைக்கப்படுவதற்கான சாத்தியம்.. தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது