இன்று 18-05-2022 வைகாசி மாதம் 04ம் நாள் புதன்கிழமை ஆகும். இன்று திரிதியை திதி இரவு 11.37 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. இன்று கேட்டை நட்சத்திரம் காலை 08.09 வரை பின்பு மூலம் நட்சத்திரம் பின்இரவு 05.37 வரை பின்பு பூராடம். இன்று சித்தயோகம் காலை 08.09 வரை பின்பு மரணயோகம் பின் இரவு 05.37 வரை பின்பு அமிர்தயோகம். இன்று நேத்திரம் – 2. ஜீவன் – 1. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்: மதியம் 12.00-1.30, எம கண்டம்: காலை 07.30-09.00, குளிகன்: பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள்: காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷம் ராசிக்ககாரர்களே:
இன்று உங்கள் ராசிக்கு காலை 08.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நிம்மதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை விலகி நற்பலனை அடைவீர்கள். சிக்கனமாக செயல்படுவது நல்லது.
ரிஷபம் ராசிக்ககாரர்களே:
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு காலை 08.09 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
மிதுனம் ராசிக்ககாரர்களே:
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் சற்று குறையும்.
கடகம் ராசிக்ககாரர்களே:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புது வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சிம்மம் ராசிக்ககாரர்களே:
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். சுபகாரியங்களில் மந்த நிலை இருக்கும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எதிர்பாராத உதவி மனமகிழ்வை அளிக்கும்.
கன்னி ராசிக்ககாரர்களே:
இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். புதிய முயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் நல்லது நடக்கும்.
துலாம் ராசிக்ககாரர்களே:
இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பைத் தரும்.
விருச்சிகம் ராசிக்ககாரர்களே:
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு குறையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு ராசிக்ககாரர்களே:
இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக இருந்த இடையூறுகள் சற்று விலகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். எதிர்பாராத உதவியால் கடன் பிரச்சினை குறையும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
மகரம் ராசிக்ககாரர்களே:
இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதபலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
கும்பம் ராசிக்ககாரர்களே:
இன்று உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள்.
மீனம் ராசிக்ககாரர்களே:
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.