உள்ளங்கையில் இந்த சனி ரேகை இருந்தால் உங்ககிட்ட பணம் எப்போதும் வந்து கொண்டிருக்குமாம்!
ஒருவரது கையில் உள்ள சனி ரேகை அவரது அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். கையில் சனி ரேகையை தெளிவாக வைத்திருப்பவர்கள், அதிர்ஷ்டம் நிறைந்தவராகவும், எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருப்பர்.
அதோடு சனி ரேகை இருப்பவர்களிடம் சனி பகவான் எப்போதும் அன்பாக இருப்பாராம்.
சனி ரேகை எங்கு உள்ளது?
சனி மேடு என்பது உள்ளங்கையில் நடுவிரலின் கீழே உள்ள பகுதியாகும். மேலும் சனி ரேகையானது கையின் நடுவில் இருந்து தொடங்கி சனி மேட்டிற்கு செல்லும். ஒருவரது கையில் சனி ரேகை எவ்வளவு தெளிவாகவும், வெட்டப்படாமலும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார் என்று கைரேகை ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
நற்பலனைத் தரும் சனி ரேகை ஒருவரது மணிக்கட்டின் மேல் பகுதியில் இருந்து சனி ரேகை அல்லது விதி ரேகை சனி மேட்டிற்கு வெட்டப்படாமல் சென்றால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அதிர்ஷ்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். முக்கியமாக இத்தகையவர்கள் சிறு வயதிலேயே வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மேலும் இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்களிடம் செல்வம் அதிகம் சேரும்.