Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 14.03.2022 Today Rasi Palan 14-03-2022 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 14.03.2022 Today Rasi Palan 14-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
391

இன்று 14-03-2022 மாசி மாதம் 30ம் நாள் திங்கட்கிழமை ஆகும். இன்று ஏகாதசி திதி பகல் 12.06 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூசம் நட்சத்திரம் இரவு 10.07 வரை பின்பு ஆயில்யம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. இன்று பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. காருடையான் நோன்பு இரவு 8.00 – 9.00. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.

ரிஷபம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மிதுனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

கடகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை நிலவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

கும்பம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.

மீனம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் உள்ள கருத்து வேறுப்பாட்டால் மன சங்கடங்கள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

Previous articleஇன்றைய ராசி பலன் 13.03.2022 Today Rasi Palan 13-03-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article17ஆம் தேதிக்குப் பின்னர் இந்த‌ 6 ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றம்! யாருக்கும் சுப செய்திகள் தேடி வரும்!