மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயரும் புதன் பகவானால் 12 ராசிக்கும் இன்றிலிருந்து 18 நாட்களுக்கு எப்படியான பலன்கள் அமையப்போகிறது!
புதன் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் தேதி மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு காலை 11.31 மணியளவில் இடம் பெயர்கிறார்.
இப்போது கும்ப ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பேசும் போது சமநிலையை பேணுங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். மன அமைதி இருந்தாலும், அடிக்கடி எரிச்சலும் ஏற்படும். இக்காலத்தில் இசையில் நாட்டம் அதிகரிக்கும். இதுவரை சேமித்து வைத்த செல்வம், பணம் அனைத்தும் குறையும்.
ரிஷபம்
பணியிடத்தில் ஒரு நல்ல மாற்றத்துடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நல்ல நிலையில் இருப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். வாழ்க்கை நிலை வேதனை நிறைந்ததாக இருக்கும். நண்பர்களின் ஆதரவை இக்காலத்தில் பெறுவீர்கள்.
மிதுனம்
பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான யோகம் உருவாகும். தினசரி செயல்பாடுகளில் இடையூறுகளை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
தேவையில்லாத கோபத்தைத் தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கலாம். இக்காலத்தில் சுயமாக இருங்கள். உங்கள் சகோதரரின் உதவியால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் உருவாகும்.
சிம்மம்
நண்பரின் உதவியால் வேலை மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் மற்றும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களின்ஆதரவு கிடைக்கும். அதிகப்படியான கோபத்தைத் தவிர்த்திடுங்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் முடிவடையும்.
கன்னி
இக்காலத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். குடும்ப பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருக்கும். உங்கள் குழந்தைகள் கஷ்டப்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். இக்காலத்தில் பண வரவிற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
துலாம்
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோரிடம் இருந்து பணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் எழும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும்.
தனுசு
அறிவுசார் வேலைகளில் ஆர்வம் மற்றும் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தினருடன் ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லலாம். இக்காலத்தில் தன்னம்பிக்கையுடன் இருங்கள். எதிலும் அதிக ஆர்வத்துடன் இருப்பதைத் தவிர்த்திடுங்கள். தாயாரிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிகப்படியான செலவுகளால் சிரமப்படுவீர்கள்.
மகரம்
குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உருவாகும். நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வருமானத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.
கும்பம்
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. திட்டமிடப்படாத செலவுகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சேமித்து வைத்த செல்வம் குறையும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதிகப்படியான கோபத்தைத் தவிர்த்திடுங்கள். உங்கள் வாழ்க்கை சற்று அசௌகரியமாக இருக்கும். இக்காலத்தில் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும்.
மீனம்
வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களின் பொறுமை குறையும். பயணத்தில் சிரமங்களை சந்திக்கக்கூடும். நல்ல சுவையான உணவுகளை உண்ணத் தோன்றும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். மேலும் சற்று பிடிவாதமாகவும் இருப்பீர்கள்.