இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு பிறக்கப்போகும் 2022ம் ஆண்டு பணவரவு தேடிவரும்!
1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
மற்றவர்களின் உதவியைப் பெற வெட்கப்பட வேண்டாம். அங்கார அணுகுமுறையை கைவிடுத்து பணிவுடன் நடந்து கொள்ளவும். இந்தாண்டு ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம் தொடர்பான வர்த்தகத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். முதலீடுகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனையும், கவனமும் தேவை.
சிலர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கண் பிரச்சினைகள் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
பிறரின் ஆலோசனை கேட்டு நடப்பதால் உங்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும். உங்கள் மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து செயல்படவும். எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். சரியான நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உண்ணவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தப் பிராணாயாம செய்வது நல்லது.
3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
உங்கள் முழு கவனத்தையும் உங்களுக்கான தொழில், வேலையில் செலுத்துங்கள். திருமணம், குழந்தைப் பேறு வகையில் உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை நீங்கள் வரவேற்க தயாராகுங்கள். உங்களுக்காக முடிவுகளை எடுக்கும் போது தான் தான் பெரியவன், தன்னால் மட்டும் தான் அனைத்தும் முடியும் என்ற அகங்காரத்தை விலக்கி வைத்து முடிவெடுக்கவும்.
கல்வி சார்ந்த உங்கள் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். தினமும் உலர் பழங்களைச் சாப்பிடுவதை பின்பற்றுங்கள். உங்கள் தொண்டை, பற்கள் சார்ந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
இந்த ஆண்டு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்கள் தம்பி, தங்கை என வயதில் இளையவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மது அருந்துவதையும், அசைவ உணவு சாப்பிடுவதையும் தவிர்க்கவும். உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்த சமநிலைப்படுத்தப்பட்ட பச்சைக் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. சரிவிகித உணவைக் கடைப்பிடியுங்கள். புதிய ஒப்பந்தங்கள், கையெழுத்திடுவது போன்ற விஷயங்களை புதன் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை செய்து நல்லது.
5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
புதிய பங்குதாரர், கூட்டாளிகளை சேர்த்துக்கொள்ள சிறந்த ஆண்டு அல்ல. குடும்ப உறவுகள் வலுப்பெறுவதோடு, மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படக்கூடிய நல்ல ஆண்டாக அமையும். புதன் கிழமைகளில் பச்சைக் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். ஏழை, எளியோருக்கு அன்னதானம், உணவு தானம் கொடுப்பது நல்லது.
6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
2022ம் ஆண்டு உங்கள் தொழில், உத்தியோக வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். இருப்பினும் உங்கள் செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். வரவை விட செலவு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மண வாழ்க்கை இன்ப மயமானதாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழுங்கள். துணைக்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள். துரித உணவுகளையும், அதிக சக்கரையை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது அவசியம்.
7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
புதிய நண்பர்கள், ஆதரவாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி துறையை அடிப்படையாக கொண்ட தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய ஆண்டாக இருக்கும்.
மே மாதத்திற்கு பின்னர் ஒட்டு மொத்தமாக தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உங்கள் பணியில் வளர்ச்சி பெறுவதை உணர முடியும்.
வயிறு சார்ந்த பிரச்சினைகளில் கவனம் தேவை. வயிற்றுக்கு இதமளிக்கக்கூடிய பழச்சாறு, பழங்கள் எடுத்துக் கொள்ளுதல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றவும்.
8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
நீங்கள் நினைத்தபடி நீங்கள் முயற்சிக்கும் விஷயங்கள் நடக்காமல் போகலாம். இருப்பினும் பொறுமையாக முயற்சி செய்வது அவசியம். மனக்குழப்பம் அடைவதும், பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் தவிர்க்கவும். உங்கள் வயிறு மற்றும் பற்கள் தொடர்பான பிரச்னைகளை கூடுதல் கவனத்துடன் கவனிப்பதும், அதுதொடர்பான சிறிய பிரச்னைகளையும் தீர்வு காண பாருங்கள்.
திருமணம் செய்துகொள்ளவும், அது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளவும் சிறந்த ஆண்டாக இருக்கும். பணத்தை சேமிக்க நல்ல சூழல் அமையும். கட்டுமான துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தாண்டு சிறப்பானதாக இருக்கும்.
9, 18 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்
உங்கள் அன்பான துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட நேரத்தை ஒதுக்குவது அவசியம். வெளிநாடு தொடர்பான வியாபாரம், தொழில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த ஆண்டாக அமையும்.
கோபத்தைத் தவிர்த்து, பொறுமையைக் கையாண்டு முயற்சி செய்யவும். முதலீடுகள் செய்ய சிறப்பான நேரம். அதன் மூலம் நல்ல லாபத்தை அறுவடை செய்யலாம்.
புத்தாண்டு அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், மன மகிழ்ச்சி, ஆரோக்கியத்தையும் தருவதாக இருக்கும் என நம்புவோம். நீங்கள் செழிப்பான வாழ்க்கையைப் பெற மன அமைதியும், நம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் முன்னேறுங்கள்.