Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசி பலன் 13.11.2021 Today Rasi Palan 13-11-2021 Today Tamil Calendar Indraya...

இன்றைய ராசி பலன் 13.11.2021 Today Rasi Palan 13-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0
394

இன்றைய ராசிப்பலன் 13-11-2021, ஐப்பசி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.48 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. வாக்கிய குருப்பெயர்ச்சி மாலை 06.10.

இராகு காலம்: காலை 09.00-10.30, எம கண்டம்: மதியம் 01.30-03.00, குளிகன்: காலை 06.00-07.30, சுப ஹோரைகள்: காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம் ராசிகாரர்களே:

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

ரிஷபம் ராசிகாரர்களே:

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளி இடங்களில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

மிதுனம் ராசிகாரர்களே:

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

கடகம் ராசிகாரர்களே:

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

சிம்மம் ராசிகாரர்களே:

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி ராசிகாரர்களே:

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம் ராசிகாரர்களே:

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம் ராசிகாரர்களே:

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

தனுசு ராசிகாரர்களே:

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிட்டும்.

மகரம் ராசிகாரர்களே:

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.

கும்பம் ராசிகாரர்களே:

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் ராசிகாரர்களே:

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

Previous articleரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியால் குருபகவான் வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை எப்படியான பலன்களை கொடுக்கப்போகிறார்!
Next article12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி பலன்கள்! விரிவான பலன்கள்!