மேஷம்
பயணத்தில் எச்சாிக்கை தேவை. உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும். பணப்பிரச்னை தலையெடுக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
ரிஷபம்
ஆறாம் வீட்டில் புதன் பயணம் செய்வதால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.
மிதுனம்
5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும். பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள் அப்புறம் அது தொல்லையில் வந்து முடிந்து விடும். புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை வணங்குங்கள்.
கடகம்
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும்.
சிம்மம்
தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும்.
கன்னி
இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். துலாம் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை.
விருச்சிகம்
தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள்.
சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
தனுசு
பண வருவாய் உண்டு. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். பண வருவாய் உடன் திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும்.எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு.
மகரம்
வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும்.
கும்பம்
பண வருமானம் அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும்.
மீனம்
தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.