திருகோணமலையில் நடந்த ஆர்ப்பாட்டம்! விசனத்தில் மக்கள்!

0

திருகோணமலையில் நடந்த ஆர்ப்பாட்டம்! விசனத்தில் மக்கள்!

திருகோணமலை – மொரவெவ பிரதேசத்திலுள்ள விவசாயிகள், அரசாங்கம் உடனடியாக பசளையை வழங்க வேண்டுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பாக ஆரம்பமாகியிருந்த குறித்த போராட்டம் நடை பவனியாக கமநல சேவைத் திணைக்களத்திற்கு முன்பாக சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் 12,500 ரூபாய் வழங்கப்படுவதாகவும், அப்பணத்தைக் கொண்டு சேதனைப் பசளை தயாரிக்க முடியாது எனவும், சேதனப் பசளைக்கான உற்பத்தி காலம் 3 தொடக்கம் 6 மாத காலமாக காணப்படும் நிலையில் இக்கால கட்டத்திற்குள் பெரும் போகம் நிறைவடைந்து விடும் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே அரசாங்கம் உரிய நேரத்தில் பசளையைத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மொரவெவ பிரதேச விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மனோகாந்தனிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆ-ண் நண்பருடன் மெளனராகம் ஹீரோயின் ரவீனா கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம் ! இவர்தான் காதலரா!
Next articleஇன்றைய ராசி பலன் 26.10.2021 Today Rasi Palan 26-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!