ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன!

0

ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன!

ஒருவரின் முன் ஜென்ம கர்ம வினைகளை பொருத்து சனிபகவான் அவர்களுக்கான தண்டனையை கொடுப்பதே ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி எனப்படும்.

பொதுவாக ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனி இவை இரண்டுமே வயதிற்கு ஏற்றார் போல் பிரச்சினைகளைக் கொடுக்கும்.

நான்கு வயது முதல் 15 வயதில் உள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்கள் படிப்பில் சற்று மந்தமாகவும் மிகவும் கவனக்குறைவு உடையவர்களாகவும் இருப்பார்கள். இதுவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களின் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும்.

அது போல திருமண வயதில் உள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களின் திருமணத்தில் நிறைய பிரச்சனைகள் உண்டாகும். அதையும் மீறி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் பொழுது கணவன் மனைவி இருவருமே மிகப் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

அதுமட்டுமின்றி இன்னும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

மனரீதியாக மிகக் கடுமையான அழுத்தம் ஏற்படும். சிலருக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டதை போன்ற எதிர்மறையான உணர்வு இருக்கும். இதனால் நல்லவன் கெட்டவனாகவும் அறிவு தலைகீழாகவும் மாறும்.

சிலருக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறும். உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.

சொந்த ஊரில் இருந்தால் வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும்.

வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பார்கள். பிரச்சினை முடிந்த பிறகு அவர் மீது தவறில்லை என்று தெரியவரும்.

இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள். ஞானி போல பேசுவார்கள். அந்த அளவிற்கு சனி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்துவிட்டு போய் விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்று நடைபெற்ற‌ செவ்வாய் பெயர்ச்சி 12 ராசியினருக்கும் எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கின்றது என்பதைப் பார்ப்போம்.
Next articleஇன்றைய ராசி பலன் 23.10.2021 Today Rasi Palan 23-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!