கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன் துலாம் ராசிக்கு செப்டம்பர் 22ம் திகதி முதல் அக்டோபர் 2ம் திகதி இடப்பெயர்ச்சியாகவுள்ளார். அதன் பின்னர் அக்டோபர் 18ம் தேதி வரை புதன் வக்கிர நிலைக்கு செல்ல உள்ளார்.
இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம்.
உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
காதலை சொல்ல இது ஏற்ற தருணம் அல்ல. உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் வந்து கையிருப்பு கரைந்து விடும் கவனம் தேவை.
ரிஷபம்
ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் செல்கிறார். 6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம் இதுவாகும்.
பேச்சு வன்மை அதிகரிக்கும். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழும் கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். சகோதா்களின் உதவி கிடைக்கும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மை தரும்.
மிதுனம்
சிம்மம் ராசிக்கு 5வது இடத்தில் புதன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்.
எழுத்து பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும். நண்பர்கள், உயரதிகாரிகள், இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வழியில் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை வணங்குங்கள்.
கடகம்
உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் வேலைக்கு ஏற்ற கூலி கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சிறந்த வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும்.
வீடு, வண்டி வாகன பராமரிப்புக்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்வதால் நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு பிரச்னை ஏற்படும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும்.
இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும்.
எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் மருத்துவ செலவு அதிகரிக்கும்.
கன்னி
உங்க ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.
பேச்சில் இனிமை அதிகரிக்கும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.
சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருமானம் அதிகரிக்கும். சொத்து சோ்க்கை ஏற்படும். இந்த கால கட்டத்தில் எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.ஙபுதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிய மேலும் நன்மைகள் நடக்கும்.
துலாம்
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் புத பகவானால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைய புதன்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கவும்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள்.
உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும்.
நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும் உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள்.
சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்கவும்.
தனுசு
புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.
இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது.
வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உடன் திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம்.
மகரம்
புதன் 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும்.
திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். கணவன், மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். காதலை சொல்ல ஏற்ற தருணம் இதுவாகும்.
தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கும்பம்
புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சனி, சூரியனுடன் இணைந்து அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.
பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும்.
தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.
மீனம்
புதன் 8வது இடத்தில் அமர்கிறார். எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும்.
இடம் பொருள் அறிந்து பேசினால் நல்லதே நடக்கும். பணம் வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம்.
வேலை தொழிலில் புரமோசனும் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும்.