இன்றைய ராசி பலன் 14.03.2021 Today Rasi Palan 14-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 14-03-2021 பங்குனி மாதம் 01ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று பிரதமை திதி மாலை 05.06 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின் இரவு 02.19 வரை பின்பு ரேவதி. இன்றைய நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். இன்று காருடையான் நோன்பு.

இராகு காலம்: மாலை 04.30 – 06.00, எம கண்டம்: பகல் 12.00 – 01.30, குளிகன்: பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள்: காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்: இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உயரும்.

கடகம்: இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வேலைபளு சற்று குறையும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்: இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

விருச்சிகம்: இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.

மகரம்: இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

கும்பம்: இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம்: இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 13.03.2021 Today Rasi Palan 13-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 15.03.2021 Today Rasi Palan 15-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!