பிக் பாஸில் இருந்து இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியாக இருந்த விஷயம், பிக் பாஸின் குரல். ஆம் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.
தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. இதில் பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன் பிக் பாஸ் துவங்கிய போது, தமிழ் பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர், சீரியல் நடிகர் அமித் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை மறுத்தார் அமித். நான் கன்னடத்தில் ஒரு முறை பிக் பாஸிற்கு குரல் கொடுத்துள்ளேன். ஆனால் தமிழில் இதுவரை நான் குரல் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பிக் பாஸாக குரல் கொடுப்பது யார் என்று முதல் முறையாக தெரியவந்துள்ளது.
இவரின் பெயர் சச்சிதானந்தம். இவர் பாலிவுட் நடிகர். ஆம் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார் மற்றும் குரல் வல்லுனராக இருக்கிறாராம்.
இதோ அவரின் புகைப்படங்கள்..
