“பொன்மகள் வந்தாள்” சீரியல் நடிகை விவாகரத்து.

0

தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நடிகை மேக்னா இவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த மேக்னா வின்சென்ட் அவர்கள். தமிழில் “தெய்வம் தந்த வீடு”, “பொன்மகள் வந்தாள்”, “அவளும் நானும்” ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபல்ய‌மானார். தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான “கயல்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் டான் டோமி என்பவரை காதலித்து 2017 ல் திருமணம் செய்து கொண்டதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.

மேக்னா “பொன்மகள் வந்தாள்” சீரியலில் நடிக்கும் போது விக்கி க்ரிஷுடன் காதல் ஏற்பட்டதாம். தற்போது முறைப்படி விவாகரத்து கிடைத்துவிட்டதால் மேக்னா விக்கியை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி அவர்களிடமிருந்து எந்த பதிலும் வெளிவரவில்லை.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 05.05.2020 Today Rasi Palan 05-05-2020 Today Calendar Indraya Rasi Palan!
Next articleசெம்ம வைரலாகும் சன்னி லியோன் வீடியோ பதறிய கணவர்?