கொரோனா நிதியினை அதிகம் கொடுத்தது யார்? என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விப ரீ தம் ! ஒருவர் கைது!

0

கொரோனா நிதியினை அதிகம் கொடுத்தது யார்? என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த விபரீதம் ! ஒருவர் கைது!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கூலிதொழிலாளியான இவர் விஜய் ரசிகர். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (22) இவர் ரஜினி ரசிகர். இவர்கள் இருவரும் நண்பர்கள். அந்தவகையில் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது யார்? ரஜினியா? விஜய்யா? என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அது மோதலாக வெடித்தது. ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு கைகளால் யுவராஜை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் யுவராஜுக்கு தலையில் அடிபட்டது. இதனை பார்த்ததும் தினேஷ்பாபு அங்கிருந்து ஓடிவிட்டார். சத்தம் கேட்டு யுவராஜுன் பெற்றோர் மற்றும் அயலவர்க‌ள் ஓடிவந்து பார்த்த போது யுவராஜ் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர்.

இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்தனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமீண்டும் இயக்குனராகும் ராமராஜன் – ஹீரோ யார்?
Next articleகணவர் வீட்டில் செய்யும் லீலைகளை வெளியிட்டு கணவரை அசிங்கப்படுத்திய நடிகை சன்னி லியோனி!