Home Jaffna News பதுக்கி வைத்தால் வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பதுக்கி வைத்தால் வர்த்தகர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

0
459

வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தால் ஊரடங்கு விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

வர்த்தகர்கள் தொடர்பாக தமக்கு பல முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது குறித்து நுகர்வோர் அதிகார சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும், அவா் தெரிவித்தார்.

திங்கட்கிழமை(6/4/2020) அமைச்சின் செயலகத்தில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

மேலும் சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் நிதி விரைவில் வழங்கப்படும் என்றும் பேருந்து சாரதிகள், நடத்துனர் மற்றும் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

By: Tamilpiththan

Previous articleநடிகை மீனா, கொரோனா விழிப்புணர்வு வீடியோ!
Next articleஇன்று இரவு பிரதமர் நாட்டு மக்களுக்கு விசேட உரை!