இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவருடைய சடலத்தை அவரின் வீட்டுக்கு எடுத்ததுச் செல்லும் போது ஏற்ப்படட சோகம்!

0

இலங்கையின் முதலாவது முறையாக நேற்றைய தினம் கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மரணமடைந்தவர் 60 வயதுடைய நபர் அவருடைய சடலத்தை வீட்டுக்கு எடுத்ததுச் செல்ல முடியாது என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர் என்றும் நேற்றைய தினமே இவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவர் “மாரவில” என்னும் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது. ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா நோய் தொற்றினால் பீடிக்கப்பட்ட இவருடைய உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே முகவும் மோசமாக இருந்தது என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த குறித்த நபரின் பூத உடல் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரினுடைய சடலத்தை அவரினுடைய வீட்டுக்கு எடுத்துச் செல்ல இலங்கை சுகாதார அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.

Previous articleபிரிட்டிஸ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று.
Next articleகொரோனா தோன்றுவதற்கு இது தான் காரணமா? என்ன நடக்கிறது இந்த உலகில்? LOGIC தெரிந்தவர்கள் சற்று சிந்திக்கவும்!