Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal வயதான கோடீஸ்வர தந்தைக்கு இளம் பெண்ணை திருமணம் செய்து வைத்த மகள்கள்: ஆச்சரிய நிகழ்வு!

வயதான கோடீஸ்வர தந்தைக்கு இளம் பெண்ணை திருமணம் செய்து வைத்த மகள்கள்: ஆச்சரிய நிகழ்வு!

0
581

ரஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் கோடீஸ்வரின் மகள்கள் அவர் தந்தைக்கு வேறு பெண்ணை மனைவியாக தெரிவு செய்திருக்கும் வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாட்டின் பெரிய கோடீஸ்வர தொழிலதிபரான கோன்ஸ்டாண்டின் ஷிஹிபினின் (54) ஏற்கனவே ஐந்து முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவராவார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று Millionaire for Marriage என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் ஏற்கனவே திருமணமான கோடீஸ்வரர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இளம் பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் அப்பெண்ணை கோடீஸ்வரர் தெரிவு செய்யமுடியாது, அதற்கு பதிலாக அவரின் பிள்ளைகள் தெரிவு செய்ய வேண்டும்.

அதன்படி ஷிஹிபினின் தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் பல இளம் பெண்கள் கூட்டமாக கலந்து கொண்ட நிலையில் அவர்களின் அழகு மற்றும் தகுதியை கொண்டு ஷிஹிபினின் பிள்ளைகள் தனது அப்பாவுக்கு ஏற்ற மனைவியையும், தங்களுடையை சித்தியையும் தெரிவு செய்தார்கள்.

ஷிஹிபினின் இளைய மகளான அலெக்சாண்டரா (16) கூட்டத்தில் இருந்த 40 வயது பெண்ணை பார்த்து உன்னை போல வயதான பெண்ணை என் அப்பா மணக்க மாட்டார், இளம் பெண்ணை தான் மணப்பார் என கூறி அவரை திட்டினார்.

அதே போல அங்கிருந்த இன்னொரு பெண் பொலிஸ் பணியில் இருந்ததால் அவரும் நிராகரிக்கப்பட்டார்.

பின்னர் இளம் பெண்ணொருவரை இறுதியாக தங்களது தந்தைக்கு மனைவியாக ஷிஹிபினின் பிள்ளைகள் தெரிவு செய்தார்கள்.

தெரிவு செய்யப்பட்ட பெண் இனி ராஜ போக வாழ்க்கையை வாழலாம்.

இந்நிகழ்ச்சியில் அடிக்கடி பல கோடீஸ்வரர்கள் கலந்து கொண்டு தனக்கான மனைவியை தங்களது பிள்ளைகள் மூலம் தெரிவு செய்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிரபல நடிகை மீனாட்சி கழுத்து அறுத்து கொலை: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
Next articleதம்பி மனைவியை துண்டுதுண்டாக வெட்டி கொன்றது ஏன்? மைத்துனர் பரபரப்பு வாக்குமூலம்!