ஆத்திசூடி Aathichudi) ஒளவையார் (Avvaiyar) ஆத்திசூடி பாடல்கள் (Aathichudi Song) ஆத்திசூடி பொருள் விளக்கம் (Aathichudi Porul Vilakkam) Aathichudi in Tamil. Aathisudi, Aathisoodi, Aathichoodi.
ஆத்திசூடி (Aathichudi) என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் எனப்பட்ட பெண் புலவரால் இயற்றப்பட்ட நீதி நூல் ஆகும். இது எளிமையான வரிகள் உள்ளடங்கலாக அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இயற்றப்பட்ட நீதிநூல் ஆகும். ஆத்திச்சூடியானது உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம் மற்றும் வகர வருக்கம் எனும் பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் கடவுள் வாழ்த்து ஒன்றும் அது தவிர 109 ஒற்றைவரி பாடல்களை கொண்டு அமைந்துள்ளது. ஆத்திச்சூடியானது தமிழ் சமுதாயம் நல்லொழுக்கத்தோடு வளர வேண்டும் என்பதற்காக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் பள்ளி பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் எளிமையான சிறுசிறு சொற்றொடர்களால் அமைந்தது. அன்றைய காலத்தில் வழக்கத்தில் இருந்த குருகுலங்கள் திண்ணைப் பள்ளிகள் முதல் இன்றைய கல்வி முறை வரை தமிழ் கற்கும் அனைவரும் தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தரும் பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டே கற்பிக்கும் வழக்கத்தை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் அனைவருக்கும் பயனளிக்கும் எனும் நோக்கோடு ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடியை எமது இணையத்தளத்தில் உலாவவிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆத்திசூடி கடவுள் வாழ்த்து – Aathichudi Kadavul Valthu
“ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே”
Aathichudi Amarndha Devanai Eathi Eathi Tholuvom Yaame
பொருள்: திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை வாழ்த்தி வாழ்த்தி வணங்குவோம் நாமே.
ஆத்திசூடி உயிர் வருக்கம் – Aathichudi Uyir Varukkam
“அறஞ் செய விரும்பு” (1) – Aram Seiya Virumbu Meaning in Tamil
பொருள்: நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
“ஆறுவது சினம்” (2) – Aaruvathu Sinam Meaning in Tamil
பொருள்: கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
“இயல்வது கரவேல்” (3) – Iyalvathu Karavel Meaning in Tamil
பொருள்: உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
“ஈவது விலக்கேல்” (4) – Eevathu Vilakkel Meaning in Tamil
பொருள்: ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.
“உடையது விளம்பேல்” (5) – Udayathu Vilambel Meaning in Tamil
பொருள்: உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
“ஊக்கமது கைவிடேல்” (6) – Ookamadhu Kaividael Meaning in Tamil
பொருள்: எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
“எண் எழுத்து இகழேல்” (7) – En Ezhuthu Igalel Meaning in Tamil
பொருள்: கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
“ஏற்பது இகழ்ச்சி” (8) – Erpathu Igalchi (Yerpathu Igazhchi) Meaning in Tamil
பொருள்: இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
“ஐயம் இட்டு உண்” (9) – Iyam Ittu Un Meaning in Tamil
பொருள்: யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
“ஒப்புரவு ஒழுகு” (10) – Oppuravu Ozhugu Meaning in Tamil
பொருள்: உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
“ஓதுவது ஒழியேல்” (11) – Odhuvadhu Ozhiyel (Othuvathu Oliyel) Meaning in Tamil
பொருள்: நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
“ஔவியம் பேசேல்” (12) – Oviyam Pesale (Avviyam Pesel) Meaning in Tamil
பொருள்: ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
“அஃகஞ் சுருக்கேல்” (13) – akkam surukel Meaning in Tamil
பொருள்: அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
ஆத்திசூடி உயிர்மெய் வருக்கம் – Aathichudi Uyirmei Varukkam
“கண்டு ஒன்று சொல்லேல்: (14) – Kandu Ondru Sollel Meaning in Tamil
பொருள்: கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
“ஙப் போல்வளை” (15) – Nappol Valai Meaning in Tamil
பொருள்: ‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.”ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று
ஔவை
உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.“சனி நீராடு” (16) – Sani Neeradu Meaning in Tamil
பொருள்: சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
“ஞயம் பட உரை” (17) – Najam Pada Uri Meaning in Tamil
பொருள்: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
“இடம் பட வீடு எடேல்” (18) – Idampada Veedu Edel Meaning in Tamil
பொருள்: உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
“இணக்கம் அறிந்து இணங்கு” (19) – Inakkam Arinthu Inangu Meaning in Tamil
பொருள்: ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
“தந்தை தாய்ப் பேண்” (20) – Thanthai Thai Pen Meaning in Tamil
பொருள்: உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
“நன்றி மறவேல்” (21) – Nandri Maravel Meaning in Tamil
பொருள்: ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
“பருவத்தே பயிர் செய்” (22) – Paruvathe Payir Sei Meaning in Tamil
பொருள்: எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
“மண் பறித்து உண்ணேல்” (23) – Man Parithu Unnel Meaning in Tamil
பொருள்: பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
“இயல்பு அலாதன செயேல்” (24) – Iyalbu Alathana Seyyel Meaning in Tamil
பொருள்: நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
“அரவம்ஆடேல்” (25) – Aravam Aattel Meaning in Tamil
பொருள்: பாம்புகளை பிடித்து விளையாடாதே.
“இலவம் பஞ்சில் துயில்” (26) – Ilavam Panjil Thuyil Meaning in Tamil
பொருள்: இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
“வஞ்சகம் பேசேல்” (27) – Vanjagam Pesel Meaning in Tamil
பொருள்: படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.
“அழகு அலாதன செயேல்” (28) – Azhagu Alaathana Seyyel Meaning in Tamil
பொருள்: இழிவான செயல்களை செய்யாதே.
“இளமையில் கல்” (29) – Ilamaiyil Kal Meaning in Tamil
பொருள்: இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்)
தவறாமல் கற்றுக்கொள்.
“அறனை மறவேல்” (30) – Aranai Maravel Meaning in Tamil
பொருள்: தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.
“அனந்தல் ஆடேல்” (31) – Ananthal Aadel Meaning in Tamil
பொருள்: மிகுதியாக துங்காதே.
ஆத்திசூடி ககர வருக்கம் – Aathichudi Kagara Varukkam
“கடிவது மற” (32) – Kadivathu Mara Meaning in Tamil
பொருள்: யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
“காப்பது விரதம்” (33) – Kaapathu Viratham Meaning in Tamil
பொருள்: தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
“கிழமைப் பட வாழ்” (34) – Kizhamaipada Vaazh Meaning in Tamil
பொருள்: உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.
“கீழ்மை அகற்று” (35) – Keezhmai Agatru Meaning in Tamil
பொருள்: இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
“குணமது கைவிடேல்” (36) – Gunamathu Kaividel Meaning in Tamil
பொருள்: நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
“கூடிப்பிரியேல்” (37) – Koodi Piriyel Meaning in Tamil
பொருள்: நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.
“கெடுப்பது ஒழி” (38) – Kedupathu Ozhi Meaning in Tamil
பொருள்: பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
“கேள்வி முயல்” (39) – Kelvi Muyal Meaning in Tamil
பொருள்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.
“கைவினை கரவேல்” (40) – Kaivinai Karavel Meaning in Tamil
பொருள்: உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
“கொள்ளை விரும்பேல்” (41) – Kollai Virumbel Meaning in Tamil
பொருள்: பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
“கோதாட்டு ஒழி” (42) – Kodhatu Ozhi Meaning in Tamil
பொருள்: குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).
“கௌவை அகற்று” (43) – Kavvai Agatru Meaning in Tamil
பொருள்: வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
ஆத்திசூடி சகர வருக்கம் – Aathichudi Sagara Varukkam
“சக்கர நெறி நில்” (44) – Sakkara Neri Nil Meaning in Tamil
பொருள்: அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).
“சான்றோர் இனத்திரு” (45) – Sandrol Inathu Iru
பொருள்: அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
“சித்திரம் பேசேல்” (46) – Sithiram Pesael Meaning in Tamil
பொருள்: பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.
“சீர்மை மறவேல்” (47) – Seermai Maravel Meaning in Tamil
பொருள்: புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
“சுளிக்கச் சொல்லேல்” (48) – Sulikka Sollel Meaning in Tamil
பொருள்: கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.
“சூது விரும்பேல்” (49) – Soodhu Virumbel Meaning in Tamil
பொருள்: ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
“செய்வன திருந்தச் செய்” (50) – Seivana Thirundha Sei Meaning in Tamil
பொருள்: செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.
“சேரிடம் அறிந்து சேர்” (51) – Seridam Arinthu Saer Meaning in Tamil
பொருள்: நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
“சை எனத் திரியேல்” (52) – Saiyenath Thiriyel Meaning in Tamil
பொருள்: பெரியோர் ‘ச்சீ’ என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.
“சொல் சோர்வு படேல்” (53) – Sor Sorvu Padel Meaning in Tamil
பொருள்: பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.
“சோம்பித் திரியேல்” (54) – சோம்பித் திரியேல் Meaning in Tamil
பொருள்: முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
ஆத்திசூடி தகர வருக்கம் – Aathichudi Thagara Varukkam
“தக்கோன் எனத் திரி” (55) – Thakkon ena thiri Meaning in Tamil
பொருள்: பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.
“தானமது விரும்பு” (56) – Thaanamathu virumbu Meaning in Tamil
பொருள்: யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
“திருமாலுக்கு அடிமை செய்” (57) – Thirumaalukku adimmai sei Meaning in Tamil
பொருள்: நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.
“தீவினை அகற்று” (58) – Theevinai agattru Meaning in Tamil
பொருள்: பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
“துன்பத்திற்கு இடம் கொடேல்” (59) – Thunpatthirkku idam kodel Meaning in Tamil
பொருள்: முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
“தூக்கி வினை செய்” (60) – Thookki vinnai sei Meaning in Tamil
பொருள்: ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.
“தெய்வம் இகழேல்” (61) – Theivam ikazhel Meaning in Tamil
பொருள்: கடவுளை பழிக்காதே.
“தேசத்தோடு ஒத்து வாழ்” (62) – Theysathoodu othu vaazh Meaning in Tamil
பொருள்: உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.
“தையல் சொல் கேளேல்” (63) – Thaiyal sol kelel Meaning in Tamil
பொருள்: மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
“தொண்மை மறவேல்” (64) – Thonnmai maravel Meaning in Tamil
பொருள்: பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
“தோற்பன தொடரேல்” (65) – Thorpena thodarel Meaning in Tamil
பொருள்: ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
ஆத்திசூடி நகர வருக்கம் – Aathichudi Nagara Varukkam
“நன்மை கடைப்பிடி” (66) – Nanmai Kadaipidi Meaning in Tamil
பொருள்: நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
“நாடு ஒப்பன செய்” (67) – Naadu Oppana Sei Meaning in Tamil
பொருள்: நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
“நிலையில் பிரியேல்” (68) – Nilaiyil Piriyel Meaning in Tamil
பொருள்: உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
“நீர் விளையாடேல்” (69) – Neer Vilayaadel Meaning in Tamil
பொருள்: வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.
“நுண்மை நுகரேல்” (70) – Nunmai Nugarel Meaning in Tamil
பொருள்: நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
“நூல் பல கல்” (71) – Nool Pala Kal Meaning in Tamil
பொருள்: அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
“நெல் பயிர் விளை” (72) – Nel Payir Vilai Meaning in Tamil
பொருள்: நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
“நேர்பட ஒழுகு” (73) – Nerpada Ozhugu Meaning in Tamil
பொருள்: ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
“நைவினை நணுகேல்” (74) – Naivinai Nanugel Meaning in Tamil
பொருள்: பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.
“நொய்ய உரையேல்” (75) – Noyya Uraiyel Meaning in Tamil
பொருள்: பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
“நோய்க்கு இடம் கொடேல்” (76) – Noikku Idam Kodel Meaning in Tamil
பொருள்: மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
ஆத்திசூடி பகர வருக்கம் – Aathichudi Pagara Varukkam
“பழிப்பன பகரேல்” (77) – Pazhippena Pagarel Meaning in Tamil
பொருள்: பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
“பாம்பொடு பழகேல்” (78) – Pambodu Pazhagel Meaning in Tamil
பொருள்: பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
“பிழைபடச் சொல்லேல்” (79) – Pizhaipada Sollel Meaning in Tamil
பொருள்: குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
“பீடு பெற நில்” (80) – Peedu Pera Nil Meaning in Tamil
பொருள்: பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.
“புகழ்ந்தாரைப் போற்றி வாழ்” (81) – Pugazhdhaarai Potri Vazh Meaning in Tamil
பொருள்: உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.
“பூமி திருத்தி உண்” (82) – Boomi Thiruthi Un Meaning in Tamil
பொருள்: விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.
“பெரியாரைத் துணைக் கொள்” (83) – Periyarai Thunai Kol Meaning in Tamil
பொருள்: அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
“பேதமை அகற்று” (84) – Pethamai Agatru Meaning in Tamil
பொருள்: அறியாமையை போக்கு.
“பையலோடு இணங்கேல்” (85) – Payalodu Inangel Meaning in Tamil
பொருள்: அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
“பொருள்தனைப் போற்றி வாழ்” (86) – Porulthanai Potri Vazh Meaning in Tamil
பொருள்: பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
“போர்த் தொழில் புரியேல்” (87) – Porth Thozhil Puriyel Meaning in Tamil
பொருள்: யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.
ஆத்திசூடி மகர வருக்கம் – Aathichudi Magara Varukkam
“மனம் தடுமாறேல்” (88) – Manam Thadumarel Meaning in Tamil
பொருள்: எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
“மாற்றானுக்கு இடம் கொடேல்” (89) – Matranukku Idam Kodel Meaning in Tamil
பொருள்: பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
“மிகைபடச் சொல்லேல்” (90) – Mikai Pada Sollel Meaning in Tamil
பொருள்: சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
“மீதூண் விரும்பேல்” (91) – Meethoon Virumbel Meaning in Tamil
பொருள்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
“முனைமுகத்து நில்லேல்” (92) – Munaimugathu Nillel Meaning in Tamil
பொருள்: எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.
“மூர்க்கரோடு இணங்கேல்” (93) – Moorkarodu Inangel Meaning in Tamil
பொருள்: மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
“மெல்லி நல்லாள் தோள் சேர்” (94) – Melli Nallaal Thol Ser Meaning in Tamil
பொருள்: பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
“மேன் மக்கள் சொல் கேள்” (95) – Men Makkal Sol Kel Meaning in Tamil
பொருள்: நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
“மை விழியார் மனை அகல்” (96) – Mai Vizhiyor Manai Agal Meaning in Tamil
பொருள்: விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
“மொழிவது அற மொழி” (97) – Mozhivathu Ara Mozhi Meaning in Tamil
பொருள்: சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.
“மோகத்தை முனி” (98) – Mogathai Muni Meaning in Tamil
பொருள்: நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
ஆத்திசூடி வகர வருக்கம் – Aathichudi Vagara Varukkam
“வல்லமை பேசேல்” (99) – Vallamai Pesel Meaning in Tamil
பொருள்: உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
“வாது முற்கூறேல்” (100) – Vaathu Murkoorel Meaning in Tamil
பொருள்: பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.
“வித்தை விரும்பு” (101) – Vithai Virumbu Meaning in Tamil
பொருள்: கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
“வீடு பெற நில்” (102) – Veedu Pera Nil Meaning in Tamil
பொருள்: முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.
“உத்தமனாய் இரு” (103) – Uthanamai Iru Meaning in Tamil
பொருள்: உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
“ஊருடன் கூடி வாழ்” (104) – Oorudan Koodi Vazh Meaning in Tamil
பொருள்: ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
“வெட்டெனப் பேசேல்” (105) – Vettena Pesel Meaning in Tamil
பொருள்: யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
“வேண்டி வினை செயேல்” (106) – Vendi Vinai Meaning in Tamil
பொருள்: வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
“வைகறைத் துயில் எழு” (107) – Vaigarai Thuyil Ezhu Meaning in Tamil
பொருள்: நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
“ஒன்னாரைத் தேறேல்” (108) – Onnaarai Thaerael Meaning in Tamil
பொருள்: பகைவர்களை நம்பாதே.
“ஓரம் சொல்லேல்” (109) – Oram Sollael Meaning in Tamil
பொருள்: எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
ஆத்திசூடி முற்றிற்று.
Aathichudi, Aathisudi, Aathisoodi, Aathichoodi, Aathichudi Porul Vilakkam, Aathichudi Padalgal, Aathichudi Aram Seiya Virumbu, Avvaiyar Song, Avvaiyar Padalgal, Avvaiyar Songs in Tamil, Avvaiyar Songs Meaning in Tamil, Avvaiyar Books, ஆத்திசூடி பொருள், ஆத்திசூடி வரிகள், ஆத்திசூடி பொது விளக்கம், ஆத்திச்சூடி பாடல் விளக்கம், ஒளவையார் பாடல்கள், ஒளவையார், அவ்வையாரின் ஆத்திசூடி.
Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)
By: Tamilpiththan