இன்றைய ராசிபலன் 6.5.2018 ஞாயிற்றுக்கிழமை!
6.5.2018 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 23-ம் நாள்.
தேய்பிறை சஷ்டி திதி பிற்பகல் 3.17 வரை பிறகு சப்தமி. உத்திராட நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 3.46 வரை பிறகு திருவோணம். யோகம்: அமிர்தயோகம். முகூர்த்த நாள்.
குளிகை: 3:00 – 4:30
சூலம்: மேற்கு.
பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பல்லக்கில் வெண்ணெய்த்தாழி சேவை. மாலை குதிரை வாகனத்தில் புறப்பாடு, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
பரிகாரம்: வெல்லம்.
நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11.
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30.
இராகு காலம் மாலை மணி 4.30-6.00.
மேஷம் : மகிழ்ச்சி
ரிஷபம் : அமைதி
மிதுனம் : பிரச்னை
கடகம் : புகழ்
சிம்மம் : வெற்றி
கன்னி : வருமானம்
துலாம் : யோசனை
விருச்சிகம் : காரியசித்தி
தனுசு : மனநிம்மதி
மகரம் : சலனம்
கும்பம் : அலைக்கழிப்பு
மீனம் : ஆதாயம்
மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வ தற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம்: தன் பலம் பலவீனத்தை உணரு வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையா ட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிட்டும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிக்கலான, சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
கும்பம்: வேலைச்சு மையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கட ங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.