Home thatstamil one india tamil oneindia tamil தனியாக இருந்த காதலியின் வீட்டிற்கு சென்ற பேஸ்புக் காதலன்! அதிர்ச்சி சம்பவம்

தனியாக இருந்த காதலியின் வீட்டிற்கு சென்ற பேஸ்புக் காதலன்! அதிர்ச்சி சம்பவம்

0
863

தமிழகத்தில் காதலியின் வீட்டிற்குச் சென்ற பேஸ்புக் காதலன் திடீரென்று இறந்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் கவிதா. சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும், இவரிடம் தென்னவன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், நாளைடைவில் காதலர்களாக மாறினர்.

கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் திகதி கவிதாவிற்கு பிறந்த நாள் என்பதால் ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவில் தென்னவன் பங்கேற்றுள்ளார்.

அப்போது தென்னவனை பெற்றோரிடம் கவிதா தன்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த 30-ஆம் திகதி கார்த்திகாவின் பெற்றோர், கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த தென்னவன் அவரின் வீட்டிற்கு சென்று கார்த்திகா சமைத்து கொடுத்த பிரியாணியை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின்பு தென்னவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகா, அவரிடம் பேசுவதற்குள் தென்னவன் மயங்கியுள்ளார்.

இதனால் கவிதா அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் தென்னவனை அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் தென்னவனை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன் காவல்நிலையத்தில் தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleஅரங்கத்தில் அதிர்ந்து போன ரசிகர்கள்! சிம்புவிற்கு கிடைத்த அதிஷ்டம்! கண்ணீர் சிந்திய நடிகர்…
Next articleஇன்றைய ராசிபலன் 5.5.2018 சனிக்கிழமை!