Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 09.01.2020 வியாழக்கிழமை !

0

இன்றைய பஞ்சாங்கம்
09-01-2020, மார்கழி 24, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.34 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.37 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நடராஜர் அபிஷேகம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 09.01.2020

மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மிதுனம்
இன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.

கடகம்
இன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களில் தாமத பலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு
இன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

மகரம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

கும்பம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறி ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும்.

மீனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleAgathi Keerai Benefits அகத்தி கீரை பயன்கள் Agathi Keerai Health Benefits அகத்தி கீரை மருத்துவ பயன்கள் Agathi Keerai in English Vegetable Hummingbird
Next articleThirukkural Kelvi Adhikaram-42 திருக்குறள் கேள்வி அதிகாரம்-42 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil