Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 26.12.2019 !இன்றைய பஞ்சாங்கம் ! Tamil...

Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 26.12.2019 !இன்றைய பஞ்சாங்கம் ! Tamil calendar 2020 !

0
950

இன்றைய பஞ்சாங்கம் 26-12-2019

மார்கழி 10, வியாழக்கிழமை

அமாவாசை திதி காலை 10.43 வரை பின்பு வளர்பிறை பிரதமை.

மூலம் நட்சத்திரம் மாலை 04.50 வரை பின்பு பூராடம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.

சூரிய கிரகணம். காலை 08.07 மணி முதல் 11.14 மணி வரை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00

மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் – 26.12.2019

மேஷம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்: உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். தூர பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.

மிதுனம்: பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.

கடகம்: திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சீராகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும்.

சிம்மம்: தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும். இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி: நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.

துலாம்: பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். கடன்கள் குறையும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: செய்யும் செயல்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும். இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் மனக்குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும்.

தனுசு: தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்: தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கும்பம்: அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக லாபம் பெருகும், மறைமுக பகை நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம்: கடன்கள் குறையும். இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

Previous articleசின்னத்திரையின் வில்லி நடிகை நீலிமா ராணியின் முதுகு தரிசனம் ! கவர்ச்சி காட்டிய வில்லி !
Next articleஇலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்ந்த அரிய சூரிய கிரணம்!