Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 22.12.2019 இன்றைய பஞ்சாங்கம் !

Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 22.12.2019 இன்றைய பஞ்சாங்கம் !

0
959

இன்றைய பஞ்சாங்கம் 22-12-2019,
மார்கழி 06, ஞாயிற்றுக்கிழமை,
ஏகாதசி திதி மாலை 03.22 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம்.
சித்தயோகம் மாலை 06.37 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி.
பெருமாள்- லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இன்றைய ராசிப்பலன் – 22.12.2019

மேஷம்: திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும்.

ரிஷபம்; சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை கூடும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்: சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். இன்று பணவரவு சுமாராக இருக்கும்.உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கடகம்: பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து அமைதி நிலவும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வீட்டில் பெண்களுக்கு பணி சுமை ஓரளவு குறையும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்

கன்னி: பொறுமையை கடை பிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.

துலாம்: வருமானம் லாபகரமாக இருக்கும். இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். சேமிப்பு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். இன்று எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்: குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்: கடன் பிரச்சினை தீரும். இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: எதிலும் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.

Previous articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 21-12-2019 இன்றைய ராசி பலன்!
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 23.12.2019 திங்கட்கிழமை !