சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்காக ஆரம்பத்தில் சிலர் பல கஷ்டங்களை சந்திப்பார். தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சேர்ந்தவர் பாரி நாகராஜூ நரேந்தர்.
பின் பிரபல ஸ்டூடியோ ஒன்றில் தயாரிப்பு பகுதியில் இவர் பணியாற்றி கொஞ்சம் பிரபலமாகி ஒரு நடிகராகிவிட்டாராம். விரைவில் வசதியாக செட்டில் ஆனதோடு மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாராம்.
இவர் தற்போது போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணியில் அவரை பற்றிய உண்மை வெளியாகியுள்ளது. கடந்த இருவருடங்களில் 16 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாராம்.
இதுகுறித்து போலிஸார் விசாரணை செய்து ரகசியமாக அவரை மடக்கி பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நாகராஜூவிடமிருந்து ரூ 14 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.





