அது இறந்த பின்னர் வயிற்றை கிழித்து சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி! உயிருடன் கரை ஒதுங்கிய திமிங்கலம்!
ஸ்காட்லாந்தில் உள்ள கடற்கரையில் பெரிய திமிங்கலம் உயிரிழந்த நிலையில் அதன் வயிற்றுக்குள் 99 கிலோ அளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Seilebost கடற்கரையில் திமிங்கலம் உயிரோடு கரை ஒதுங்கியதை மக்கள் பார்த்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த திமிங்கலம் உயிரிழந்தது.
இதையடுத்து அதன் வயிற்றை கிழித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் உள்ளே 99 கிலோ அளவில் குப்பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் Scottish Marine Animals Stranding Scheme எனப்படும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் திட்டத்தின் ஆராய்ச்சியாளர் கூறுகையில், திமிங்கலத்தின் வயிற்றில் மீன் பிடிக்கும் வலைகள், பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவைகள் இருந்தன.
திமிங்கலம் உயிரிழக்க அதன் வயிற்றில் இருந்த குப்பைகள் தான் காரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த குப்பைகள் எல்லாம் சேர்ந்து பெரிய உருண்டை பந்து போல அதன் வயிற்றில் இருந்தது.
மனிதனின் செயல்கள் எந்தளவுக்கு எதிர்வினை ஆற்றும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
அதே சமயம் இதில் முக்கால்வாசி குப்பைகள் மீன் பிடிப்பது தொடர்பானவை தான் என உறுதியாகியுள்ளது.
நான் கடற்கரைக்கு எப்போது சென்றாலும் கையில் ஒரு பையை எடுத்து சென்று அங்கிருந்து குப்பைகளை முடிந்தவரையில் அகற்றி பைக்குள் போட்டு கொள்வேன் என கூறியுள்ளார்.