இன்றைய ராசிபலன் 29.4.2018 ஞாயிற்றுக்கிழமை!

0

இன்றைய ராசிபலன் 29.4.2018 ஞாயிற்றுக்கிழமை!

29.4.2018 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 16-ம் நாள்.
வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 6.59 வரை பிறகு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் பிற்பகல் 2.26 வரை பிறகு சுவாதி. யோகம்: சித்தயோகம்.

குளிகை: 3:00 – 4:30
சூலம்: மேற்கு.
பொது: ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், சிங்கிரிகுடி நரசிம்மர் திருத்தேர், திருமுல்லைவாயல் பச்சையம்மன் மஹாபிஷேகம். ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர விரதம்.

பரிகாரம்: வெல்லம்.

நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11
எமகண்டம் மாலை மணி 4.30-6.00
இராகு காலம் மாலை மணி 4.30-6.00

மேஷம் : சிந்தனை
ரிஷபம் : ஈடுபாடு
மிதுனம் : வருமானம்
கடகம் : மரியாதை
சிம்மம் : முடிவு
கன்னி : நிம்மதி
துலாம் : பிரச்னை
விருச்சிகம் : சேமிப்பு
தனுசு : நட்பு
மகரம் : உதவி
கும்பம் : உழைப்பு
மீனம் : பொறுமை

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

மிதுனம்: வருங்காலத் திட்ட த்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். வெளிவட்டார த்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு மூன்று நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். உடல் நிலை பாதிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும்தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

தனுசு: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங் களால் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைக ளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அடா ஷர்மா- வைரல் புகைப்படம் உள்ளே!
Next articleவயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்!