196 பேருடன் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்!
எகிப்தில் உள்ள ஷர்ம் எல் ஷேக் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே பயணிகள் விமானத்தில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்கைஅப் நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737-800 வகை விமானமானது நேற்று உக்ரைனில் உள்ள சபோரிஜ்ஜியாவிலிருந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கிற்கு பறந்தது.
ஷர்ம் எல் ஷேக் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் பின்புறத்தில் உள்ள சக்கரத்தில் திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்தது.
இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்க்கப்பட்டது.
விமான வலைத்தளமான ஏர்லைவ்.நெட்டின் கூற்றுப்படி, விமானத்தின் சூடான சக்கரத்தில் ஹைட்ராலிக் திரவம் கசிந்தால் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அவசர சேவையாளராகள் விரைந்து செயல்பட்டதால், பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தின் போது 189 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் இருந்ததாக ஃபிளைட் குளோபல் கூறியுள்ளது.