Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை – 10.11.2019 !

Today Rasi Palan இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை – 10.11.2019 !

0
869

இன்றைய பஞ்சாங்கம்
10-11-2019, ஐப்பசி 24, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி மாலை 04.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரேவதி நட்சத்திரம் மாலை 05.18 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் மாலை 05.18 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

இன்றைய ராசிப்பலன் – 10.11.2019

மேஷம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பண நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

கடகம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தினருடன் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உங்கள் ராசிக்கு மாலை 05.19 வரை சந்திராஷடமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

கன்னி
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 05.19 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.

துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்
இன்று பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தூர பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

தனுசு
இன்று உங்களுக்கு உடல்நிலை சற்ற மந்தமாகவே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.

கும்பம்
இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிட்டும்.

Previous articleஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தினை உடனே செய்யுங்கள்! 2020 இல் விபரீத ராஜயோகம் தேடி வரும்?
Next articleவார ராசிப்பலன் – நவம்பர் 10 முதல் 16 வரை ! Vara Rasi Palan !