திருமணம் என்பது இரு உறவுகள் இணைந்து புதுவித பந்தத்தை உருவாக்குகிறது.
அப்படி உருவாகும் பந்தத்தை நல்ல விதமாக வழிநடத்துவதற்கு ஏற்ற பண்பினை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புதிதாக திருமண உறவில் ஈடுபடுகையில், நமக்கு கிடைக்கும் புது உறவினர்கள் மற்றும் சூழ்நிலைகளை முழுமையாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
பக்குவமாக சிந்தித்து செயல்படுவதற்கு Maturity என்பது தேவையானது, அது நமது செயல்களில் மட்டும் இருந்தால் போதாது, அதற்கேற்ற வயதும் நமக்கும் இருக்க வேண்டும்.
சிலர், முறையற்ற வயதில் திருமணம் செய்துகொண்டு குடும்ப உறவுக்குள் சென்றுவிடுகின்றனர். அதன்பின்னர், குடும்பத்துக்குள் எழும் பணப்பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு சிந்தித்து தீர்வு காண முடியாமல் குழம்பி போய் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.
இதற்கு, வயதும் ஒரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள் சிறு வயதில் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஆனால், ஆண்கள் சிறு வயதில் திருமணம் செய்துகொண்டால் ஒரு குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவதற்கான பக்குவம் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
படித்து முடித்து, கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது, மாறாக தான் சம்பாதிக்கும் பணத்தில் தனது பெற்றோருக்கு ஒரு தொகையை கொடுத்துவிட்டு, தனக்காகவும் சிறு தொகையை சேர்த்து வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.
இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும். 20 முதல் 22 வயதில் கல்லூரி படிப்பினை முடித்ததும், வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். 22 முதல் 27 வயது வரை உழைக்கும்போது, ஆண்களுக்கு ஒரு குடும்பத்தை வழிநடத்தும் பக்குவம் கிடைக்கிறது.
27 முதல் 30 வயது வரை ஆண்கள் திருமணம் செய்து கொள்கையில் அவர்களுக்கு வாழ்க்கை பற்றி சிந்திக்கக்கூடிய ஒரு பக்குவம் கிடைத்துவிடுகிறது.