பேபி அனிகா எப்படி மாறிட்டார் பாருங்க… விஸ்வாசம் வந்து ஒரு வருச்ம் கூட ஆகல!
தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை மீனாவின் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார்.
பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. மேலும், விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்கப் போகிறது என்று பகிரங்கமாக இணையதளங்களில் தகவல் வெளிவந்த போது நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் அப்பாவுடன் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறேன் என்று அதிக சந்தோஷத்தில் கூறி இருந்தார் நடிகை அனிகா.மேலும், அனிகா அவருடன் இரு படங்களில் மகளாக நடித்ததனாலே என்னவோ அவரை பார்த்தால் எனக்கு அப்பா உணர்வு ஏற்படுகிறது.
அவரை நான் “பப்பா” என்று தான் அழைப்பேன் என்றும் கூறி இருந்தார். இதையும் பாருங்க : யார் கிண்டல் செய்தாலும் கவினை வம்பிழுக்கும் சாக்க்ஷி. கடுப்பில் கவின் ஆர்மி. விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் பேபி அனிகாவின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகவும் மனமுருகி போனார்கள். மேலும், ஒரு சில பேருக்கு அனிக்காக தான் அஜித்தின் உண்மையான மகள் என்ற அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது சமீபத்தில் விஸ்வாசம் படம் வெளியாகி 300 நாட்கள் ஆனதை ஒட்டி ரசிகர்கள் இணையத்தளங்கில் #viswasam300dayscelebration என்ற ஹேஸ் டேகை ட்ரெண்ட் செய்தனர்.
மேலும், பல்வேறு திரையரங்குகளில் விஸ்வாசம் திரைப்படம் திரையிடபட்டது. இந்த நிலையில் பேபி அனிகா, போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் பேபி அனிகா இப்படி வளர்ந்துவிட்டாரே என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். கண் வைக்கும் அளவுக்கு அழகாக இருக்கும் அஜித் மகளின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தன்னுடைய கருத்துக்களை இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.