Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்து வீடியோவை விற்ற தாய்! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்!

பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்து வீடியோவை விற்ற தாய்! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்!

0
585

அமெரிக்காவில் சொந்த மகளையே பாலியல் துஷ்பிரயோகம் செய்து அது தொடர்பான வீடியோவை தாய் ஒருவர் மற்றவர்களுக்கு விற்றிருக்கும் செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் Indiana பகுதியில் உள்ள Jeffersonville-ஐ சேர்ந்தவர் Jamie Simms(23). போதைக்கு அடிமையான இவருக்கு மூன்று வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் Jamie Simms-ன் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட கணவர் அவரை தொடர்ந்து பின் தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி எப்போது போன் செய்தாலும் அங்கிருக்கிறேன், இங்கிருக்கிறேன் என்று பொய் கூறிய படி இருந்துள்ளார்.

இதனால் அவர் Jamie Simms தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் செல்போனின் உள்ளே அவர் தன்னுடைய மூன்று வயது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்வது தொடர்பான வீடியோ இருந்துள்ளது.

உடனடியாக இது குறித்து அவரிடம் கேட்ட போது, போதை மருந்து வாங்குவதற்காக பணம் தேவைப்பட்டதாகவும், அதனால் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்து, அது தொடர்பான வீடியோவை சிலருக்கு விற்றதாகவும் அதன் மூலம் பணம் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த அவர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு சிறை தண்டனை விதித்ததுடன், இது போன்ற வழக்குகளை நீதிமன்றம் சந்திக்கும் போது, பெரிதும் வேதனைப்படுவதாகவும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றத்தில் பொலிசார் சார்பில் ஆஜாராகியிருந்த வழக்கறிஞர் இந்த பெண் விற்ற வீடியோவை வாங்கிய நபர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து வழக்கு அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.

Previous articleகடவுளின் மறுபிறவியாக அவதரித்துள்ள அதிசய சிறுவன்? படையெடுக்கும் மக்கள்!
Next articleஇந்த ராசிக்காரர்களால் கடைசி வரை சேர்ந்து வாழ முடியாதாம்!