2018 ஐபிஎல் தொடரில் சாதனை! கொல்கத்தா அணியை கெத்தாக வீழ்த்தி வீர நடை போட்ட ஐயர்!

0

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது லீக் போட்டியில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. தொடர் தோல்வியை சந்தித்து வந்த டெல்லி அணி, இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்பதால், கட்டாய வெற்றியை நோக்கி இன்று விளையாடியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி டெல்லி அணிக்கு பிரிதிவ் ஷா-கோலின் முன்ரோ களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் முன்ரோ 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அடுத்து வந்த அணியின் தலைவர் ஷிரேயஸ் ஐயர், பிரிதிவ் ஷாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் டெல்லி அணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.

இவருக்கு இணையாக ஈடுகொடுத்து ஆடி வந்த பிரிதிவ் 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அ

இவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பாண்ட ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இறுதி கட்ட ஓவரின் போது தன் பங்கிற்கு மேக்ஸ்வேல்ஸ் அதிரடி காட்ட, ஐயர் சிக்ஸர் மழை பொழிய என டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் அணியின் தலைவரான் ஐயர் 40 பந்துகளுக்கு 93 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி 10 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின் 220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் கிறிஸ் லின் 5, சுனில் நரைன் 26, ராபின் உத்தப்பா 1, நிதிஷ் ராணா8, அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 18 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இருப்பினும் 7-வது வீரர்காக களமிறங்கிய ஆண்ட்ரூ ரசுல் தன் பங்கிற்கு முடிந்த அளவிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டெல்லி அணி வீரர்களின் பந்து வீச்சை சிக்ஸருக்கு பறக்க விட்டார். 30 பந்துக்கு 44 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவிஷ்கான் பந்து வீச்சில் போல்டனதால் கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்து 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி எடுத்த 219 ஓட்டங்களே அதிக பட்ச ஓட்டமாக சாதனையாக உள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடைய முதல் தலைவன் போட்டியிலே ஐயர் வெற்றிய பதிவு செய்துள்ளார்.

டெல்லி அணியின் தலைவரான காம்பீர் சில காரணங்களுக்காக அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிறந்து 2 நிமிடமே ஆன குழந்தைக்கு பெற்றோர் செய்த காரியம்.
Next articleகாதலரை பிரிந்த சோகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்!